HOORECON's My247Guide - Terms & Conditions (Tamil)
HOORECON's My247Guide - Terms & Conditions (Tamil)
அன்பார்ந்த வாடிக்கையாளரே ,
நீங்கள் எங்கள் HOORECON நிறுவனத்தின் My247 Guide முதன்முறையாக பயன்படுத்தியதால் ,தயவு கூர்ந்து எங்கள் அடிப்படை விதி முறைகளை கேட்டு ,தங்கள் ஒப்புதலை தெரிவிக்கவும் .விரிவான விதிமுறைகளுக்கான இணையதள முகவரி தங்களுக்கு SMS மூலம் அனுப்பப்பட்டுள்ளது .
விதிமுறைகள் :
1. நான் இன்றைய தேதியில் 18 வயதுக்கு மேற்பட்டவராக உள்ளேன்.
2. My247 Guide ஒரு மருத்துவ சேவையோ அல்லது தற்கொலை தடுப்பு உதவி எண்ணோ அல்ல என்பதையும் அவசர காலத்தில் ,உடனடியாக அதற்கான அவசர உதவி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என்பதையும் நன்கு அறிவேன் .
3. இந்த சேவையில் வழங்கப்படும் தகவல்கள் பொதுவான தகவல்களே என்பதையும் ,இவை அந்தந்த துறை சார்ந்த தகுதியுடைய -வல்லுனர்களின் ஆலோசனைகளுக்கு ஈடாகாது என்பதையும் நன்கு அறிவேன்.
4. இந்த சேவையில் வழங்கப்படும் தகவல்களை நம்புவதும் ஆலோசனைகளை ஏற்பதும் முழுக்க முழுக்க என் தனிப்பட்ட முடிவு .இந்த ஆலோசனைகளின் அடிப்படையில் வரும் உடல் ஆரோக்கியம் ,உயிர், வாழ்வாதாரம் சம்மந்தப்பட்ட பாதிப்புகளுக்கோ அல்லது இதர பாதிப்புகளுக்கோ HOORECON நிறுவனமோ அல்லது அதன் பங்குதாரர்களோ எவ்விதத்திலும் பொறுப்பல்ல என்பதையும் நன்கு அறிவேன் .
5. இந்த சேவையை பயன்படுத்த HOORECON நிறுவனம் நிர்ணயித்த ஆலோசனை கட்டணத்தை செலுத்த தயாராக உள்ளேன் .இந்த கட்டணத்தையும் கட்டண விதிமுறைகளை எந்த நேரத்திலும் மாற்ற HOORECON நிறுவனத்துக்கு முழு உரிமை உண்டு என்பதையும் நான் நன்கு அறிவேன் .
அன்பான வடிக்கையாளரே,
நீங்கள் மேற்கண்ட விதிமுறைகளை ஒப்புக்கொண்டீர்கள் எனில் , எண் 1 ஐ அழுத்தவும் .
நீங்கள் முடிவு செய்ய சற்று நேரம் தேவைப்படுகிறது எனில் , எண் 2 ஐ அழுத்தவும் .
நீங்கள் மேற்கண்ட விதிமுறைகளை ஏற்றுகொள்ளவில்லை எனில் , எண் 3 ஐ அழுத்தவும் .